மாவட்ட செய்திகள்

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இடமாற்றம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சாத்தூர் நில எடுப்பு தாசில்தார் ஷாஜகான், அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனித்தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சுந்தரமூர்த்தி, வெம்பக்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெம்பக்கோட்டை தாசில்தார் தனராஜ், மதுரை- தூத்துக்குடி அகல ரயில் பாதை நில எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய லோகநாதன் அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் பொறுப்பு

விருதுநகர் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ஸ்ரீதர், சிவகாசி தீப்பெட்டி ஆலை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகாசி தீப்பெட்டிஆலை தனி தாசில்தாராக பணியாற்றிய சிவஜோதி, விருதுநகர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜா உசேன் அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக (இருப்பு விருதுநகர்) நியமிக்கப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கிருஷ்ணவேணி, சாத்தூர் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மாரிச்செல்வி, விருதுநகர் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.