விருதுநகர்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றிய விஜயகுமார், திருத்தங்கல் நகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் கோவில்பட்டி நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருத்தங்கல் நகராட்சியில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக பணியாற்றும் செல்வராஜ் தொடர்ந்து அங்கு பணியாற்ற உத்தரவிடப்படுவதாக நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா தெரிவித்துள்ளார்.