புதுச்சேரி

கோவில் உண்டியலை உடைத்த வாலிபர் கைது

புதுவையில் கோவில் உண்டியலை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி உருளையன்பேட்டையில் சங்கோதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை இன்று காலை 8 மணி அளவில் வாலிபர் ஒருவர் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.

உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் கையும் களவுமாக வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஸ்டீபன் வன்லால்லுவா (வயது 26) என்பதும், புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு