மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் தனது வீட்டில் கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அண்ணாநகரைச் சேர்ந்த விஜயேந்திரன் மகன் அஜித்குமார் (வயது 24) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.