ஆரணி
சந்தவாசல் பகுதியில் சித்தூர்- போளூர் நெடுஞ்சாலையில் வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (வயது 22) என்ற வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கண்காணித்து அங்கு கஞ்சா விற்ற வினோத்தை கைது செய்து, அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.