புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செயதனர்

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் பொக்லைன் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். நேற்று  மாலை, காரைக்கால் காமராஜர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதையடுத்து செல்வம் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது காமராஜர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். உடனே அந்த வாலிபரை செல்வம் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்த அருள்மணி (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...