புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசா கைது செய்தனா.

தினத்தந்தி

காலாப்பட்டு

புதுச்சேரி பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). இவர் நேற்று  இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் அதனை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து அவர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது வானூர் தாலுகா நெசல் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் சந்திரசேகர் (35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு