மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

களக்காடு பகுதியில் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட ஜெ.ஜெ.நகர், தெற்கு தெருவை சேர்ந்த அப்துல்வகாப் மகன் அக்பர்அலி (வயது 21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேற்சொன்ன வாலிபர் கொலை முயற்சி, அடிதடி, மிரட்டல், வழிப்பறி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.

இதனையடுத்து அவர், அக்பர்அலி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், அக்பர்அலி தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.