மாவட்ட செய்திகள்

ஸ்ரீவைகுண்டம்: கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில, செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் செய்துங்கநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த அங்கப்பன் மகன் முத்துபாண்டி (வயது 21) என்பதும், அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக மோட்டார்சைக்கிளில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே முத்துபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும், மாட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.