சேதமடைந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்

பாகூ அருகே அங்கன்வாடி மையம் கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் குழந்தைகளை அனுப்ப பெற்றோ அச்சத்தில் உள்ளனா.
சேதமடைந்த கட்டிடத்தில் அங்கன்வாடி மையம்
Published on

பாகூர்

பாகூர் தொகுதிக்குட்பட்ட சுள்ளியாங்குப்பத்தில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்துள்ளன. மின் இணைப்பு இருந்தும் மின்சாரம் இல்லை.

எப்போது வேண்டுமானாலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால் குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com