

அரக்கோணம்,
மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் மதுபான கடை இருப்பதால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு இருந்து வருவதாகவும், இதனால் ரெயில் பயணிகள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருவதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த வர்த்தக பிரமுகர் பத்ரிநாராயணன் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை இருக்கும் பகுதியை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது சமூக பாதுகாப்பு தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.