வரம் தரும் மரம்

எத்தனை மரங்கள் இருந்தாலும், மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது அரசமரம்தான். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள். எனவே இதை ‘தேவலோகத்து மரம்’ என்றும் வர்ணிப்பார்கள்.
வரம் தரும் மரம்
Published on

அரசமரத்தைச் சுற்றி வலம் வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் அருள் நமக்குக் கிடைக்கும். அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரசமரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம்.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரச மரக் காற்றை நாம் சுவாசித்தால் ஆயுள் நீளூம். ஆரோக்கியம் சீராகும். வாரிசுகள் உருவாகும். அரச இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரச மரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜரையும் வைத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். கனிவான வாழ்க்கை அமையும்.

பொதுவாக வரம் தரும் மரங்களில் முதல் மரம் அரசமரமாகும். எனவே அந்த மரத்தை வணங்குவோம். தரும் பலன்களால் மகிழ்ச்சியைப் பெறுவோம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com