பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ்.. வைரலாகும் பதிவு..

கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். இவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். இவர் விக்ரம் திரைப்படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.
பாலிவுட்டில் அறிமுகமாகும் அர்ஜூன் தாஸ்.. வைரலாகும் பதிவு..
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வில்லனாக அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். இதையடுத்து, விக்ரம் திரைப்படம் இவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். 2017-ஆம் ஆண்டு 86 புதுமுகங்களைக் கொண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'அங்கமாலி டைரீஸ்'. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதனை 'கேடி என்ற கருப்புதுரை' படத்தை இயக்கிய மதுமிதா சுந்தர ராமன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் அர்ஜுன் தாஸ் இயக்குனர் மதுமிதா மற்றும் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி கூறி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com