போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்தனர்.
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூரை சேர்ந்தவர் விஜயபாண்டி (வயது21). இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 23&ந் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விஜயபாண்டியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாண்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com