மாவு மில் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது

மதுரையில் மாவுமில் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவு மில் உரிமையாளரை தாக்கிய 2 பேர் கைது
Published on

மதுரை,

மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் ராமர் (வயது 38). இவர் அனுப்பானடியில் மாவு மில் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது மாவுமில் வாசல் முன்பு 2 வாலிபர்கள் நின்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதனை ராமர் தட்டி கேட்ட போது, அவரை அவர்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பாக அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பானடியை சேர்ந்த மாரிராஜன் (20), சோனைமுத்து (19) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com