

இளையாங்குடி,
இளையான்குடி சுல்தான் அலாவுதீன் தெருவில் உள்ள மகாதீர் முகமது என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி ஆசாமி ஒருவன் அங்கு இருந்த ரூ.1000, செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடி விட்டான். அதே போல் ரசூலா சமுத்திரம் என்ற பகுதியில் மற்றெரு ஓட்டு வீட்டிலும் புகுந்த ஆசாமி ரூ.5 ஆயிரத்தை திருடி விட்டு தப்பி விட்டான். இது குறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 வீடுகளின் ஓட்டை பிரித்து திருடியது சாலைக்கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் கவுதமன்(26) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.