ஜூன் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
ஜூன் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்
Published on

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு எல்லாம் தெரிந்தாலும் எதுவுமே தெரியாதவர் போல் முகபாவனை செய்யும் குணமிக்கவர். ரகசியத்தை பாதுகாப்பவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்யோகத்தில் தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோரின் உதவி கிடைக்கும். வேலை சுமை குறையும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் சக ஊழியர்களால் பண உதவி கிடைக்கும். வெளிநாட்டு படபிடிப்பில் கலந்து கொள்வீர்கள். அதற்கு விசா கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றதால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதால் பய உணர்வு தேவையில்லை. உடல் நலம் சிறப்படையும்.

பரிகாரம்

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே!

பெற்றோர்களை போல நண்பர்களையும் நினைக்கும் அன்பு மிக்கவர் நீங்கள். ஒருபோதும் நண்பர்களுக்கு துரோகம் செய்யாத பண்பாளர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்யோகஸ்தர்கள் தங்களுடைய ஒரு பகுதிக் கடனை விரைவில் அடைத்து விடுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வுடன் பதவியும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் நினைத்தவாறே தங்களது வியாபாரம் கூட விளம்பரம் செய்வீர்கள். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்களுக்கு தொழில் செய்ய புதிய இடம் கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்ப தலைவிகளுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த உணவை செய்து பாராட்டைப் பெறுவர். பண சிக்கல்கள் அகலும். பிரிந்திருந்த தம்பதியினர் மீண்டும் இணையும் வண்ணம் சூழலை உண்டாகும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் சக நடிகர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை சொல்லாமல் இருப்பது நல்லது. தங்கள் புகழ் ஓங்கும் காலமாக இருக்கும். தங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும்.

மாணவர்களுக்கு

மாணவ மணிகளுக்கு முன்பை விட ஞாபகத்திறன் அதிகரிக்கும்.பெற்றோர்கள் ஆலோசனைப்படி நடப்பர். வகுப்பு தேர்வில் முதலிடம் பெறுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்

பௌர்ணமி திதியன்று ஜீவசமாதிகளுக்கு சென்று மெடிடேஷன் இருப்பது மிக நன்று.

துலாம்

துலா ராசி அன்பர்களே!

நீங்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், நண்பர், பகைவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தாங்கள் விரும்பிய படியே தங்கள் தொழிலாளர்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்கள் உடலை ஜிம் மற்றும் யோகாசனம் போன்ற பயிற்சியினை செய்து உடலை சீராக வைத்துக் கொள்வது நல்லது. திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர்.

மாணவர்களுக்கு

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும்.

பரிகாரம்

பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே!

நீங்கள் மற்றவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பழகி அவர்களின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். யாருடைய குறைகளையும் பொருட்படுத்தாதவர் என்றால் அது நீங்கள்தான்.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் தொல்லை குறையும். அவர்கள் உங்களை புரிந்து கொண்டு தங்களிடம் நட்பு பாராட்டுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இனி முன்னேற்றம்தான்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்வது நல்லது. கலைஞர்களுக்கு தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும்.

மாணவர்களுக்கு

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுப்பீர்கள். ஆசிரியர்களிடம் தங்கள் சந்தேகத்தை அவ்வப்போது கேட்டுவிடுவீர்கள்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது.

X

Daily Thanthi
www.dailythanthi.com