ஜூன் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத பலன்களை பார்ப்போம்.
ஜூன் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
Published on

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

மற்றவர்களின் தேவையை குறிப்பறிந்து உதவும் தயாள மனம் கொண்டவர் நீங்கள். வலக்கை செய்ததை இடக்கைக்கு அறியாவண்ணம் பார்த்துக் கொள்ளும் தன்னலம் அற்றவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

வேலைக்கு செல்பவர்கள் உத்தியோகத்தில் மனஅமைதி கிடைக்கும். ஆடம்பர செலவினை தவிர்ப்பது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும். புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு கணவரது முழு சம்பளமும் தங்களுக்கு கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார். இளம் பெண்களுக்கு விரும்பிய வாரே நல்ல துணை கிடைக்கும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை. அதிக பேச்சைக் குறைப்பது நல்லது. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்படையும்.

பரிகாரம்

வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும்.

மகரம்

நீங்கள் அதிர்ஷ்டம் வரவில்லையே என்று வருத்தப்படுபவர் இல்லை. மாறாக, முன்னேறுவதற்கு உண்டான வாய்ப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமிக்கவர்.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வாய் நிதானம் தேவை.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதல் போடுவீர்கள். அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். நல்ல தொழிலாளர்கள் கிடைப்பர்.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும். சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தங்களது கடன்களை இந்த மாதம் அடைத்துவிடுவர். தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும். முன் பணம் பெறுவர்.

மாணவர்களுக்கு

மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்

வியாழக்கிழமை அன்று குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகரை மனதார நினைத்துக் கொண்டு காரியங்களை துவங்குங்கள். அல்லது அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது.

கும்பம்

நீங்கள் புற அழகை ஆராதிப்பதை விட மற்றவர்களின் அக அழகை மட்டும் பார்த்து பழகும் இயல்புள்ளவர். உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலரே.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு உதவிபுரிவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளில் ஒரு சிலர் வெளிநாட்டில் தங்கள் தொழிலை துவங்குவர். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு தாங்கள் காத்திருந்த வேலை கிடைக்கும். தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்கும். பெரிய படங்களில் இருந்து அழைப்பு வரும். சம்பளம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர்.

பரிகாரம்

மலையில் வசிக்கும் முருகர் பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை அணிவிப்பது மிக நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

நீங்கள் உங்கள் வாழ்வில் எதிரிகளை கூட மன்னித்து விடுவீர்கள். ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

சிறப்புப்பலன்கள்

உத்தியோகஸ்தர்களுக்கு

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் சுமைகள் அதிகரிக்கும். அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர்.

வியாபாரிகளுக்கு

சொந்த தொழில் செய்பவர்கள் ஒரு சிலர் கிளைகளை அதிகரிப்பர். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவை தக்க வைப்பது நல்லது.

குடும்ப தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுக்கு மாமியார் வீட்டில் நன்மதிப்பு கூடும். தங்களது ஆலோசனையை கேட்டு நடப்பர். புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனமுடன் பழகுதல் நல்லது. தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். ஒரு சிலர் பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும்.

பரிகாரம்

ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று.

X

Daily Thanthi
www.dailythanthi.com