

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
உங்களிடம் பொருளாதாரம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு சிறந்த ஆறுதல் கூறுவதிலும் ஊக்கப்படுத்துவதிலும் வல்லவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார்.வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பொறுமையும் நம்பிக்கையும் அவசியம். ஆதலால் தங்களுக்கு பிரபலங்களால் பண உதவி கிடைக்கும்.
மாணவர்கள்
மாணவ மாணவிகளுக்கு உடல் உஷ்ணமாகும். இளநீர் நீராகாரம் போன்றவைகளை உட்கொள்வது நல்லது. அரசு தேர்வு என்பதால் பய உணர்வு அதிகரிக்கும். நன்கு படித்திருப்பது நல்லது. உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுவீடு வாங்குவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் சுமைகள் அதிகரிக்கும். அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் ஆர்வம் கொண்ட பெண்கள் புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ‘பிரபலங்கள் உதவுவார்கள். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும்.
பரிகாரம்
ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் பழகுபவர்களுக்குத்தான் தெரியும் உங்கள் குழந்தை மனம்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேறு இடத்தில் இடமாற்றம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் நிகழும். அதன் மூலம் தங்களுக்கு லாபம் கூடும். சுயதொழில் செய்யும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கைவினைப் பொருட்கள் மற்றும் தையல் கலையில் ஈடுபடுபவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் பிள்ளைகள் வீட்டிற்கு வருவதால் வீடு களைகட்டும். கணவர் வழி உறவினர்களால் வந்த தொல்லைகள் இனி அகலும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்து இந்த மாதமே படபிடிப்பிற்கு செல்வீர்கள். அத்துடன் படத்திற்கான முன் பணம் கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும்.
மாணவர்கள்
மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலம் நன்கு பிரகாசிக்க புதிய துறையிலும் பயிற்சி எடுப்பீர்கள்.வகுப்பில் வீண் அரட்டையை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும்.
பரிகாரம்
புதன்கிழமை அன்று சீனிவாச பெருமாளை தரிசித்து துளசி மாலையை சாத்துவது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
தன்னை பற்றி நினைத்து வருந்தாமல் பிறரை நினைத்து வருந்துபவர். ஆதலால் கடவுள் துணை என்றும் உங்களுக்கு உண்டு.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் நிகழும். தாங்கள் விரும்பிய இடத்திற்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் இனி தவறினை உணர்வர்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு போட்டியாளர்கள் விலகிப்போவர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்ப தலைவிகளுக்கு நீண்ட காலமாக சம்பந்திகளுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். சகோதர சகோதரி வழிகளில் உதவிகள் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். புகழ் பெற்ற பகுதியில் படபிடிப்புக்கு சென்று வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு கூடும். பிரபலமாவர். பாராட்டுகள் குவியும்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு வகுப்பில் அமைதி காப்பது மிக நன்று. கல்வி கற்பதற்கு ஏதுவாக பெற்றோர்கள் தங்களுக்கு படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருவர்.
பரிகாரம்
முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படைப்பது நல்லது.