

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
வேறுபாடு இன்றி மற்றவர்களிடம் இணக்கமுடன் பழகுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும். தங்களுடைய பகுதி நேர வேலைக்கு செல்வதிலும் தங்களுக்கு கூடுதல் சம்பளமும் கிடைக்கும். அலுவலகத்தில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு சென்ற மாதத்தை விட அதிக லாபம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் தங்கள் கணவருடன் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். தாங்கள் விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இளம்பெண்களுக்கு தாங்கள் காத்திருந்த வேலை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு நல்ல பேனர்களில் இருந்து அழைப்பு வரும். முன் பணம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். முகம் பளிச்சிடும்.
மாணவர்கள்
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பர். விரும்பிய துறையில் சேருவீர்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்
முருகர் பெருமானுக்கு சிவப்பு மலர் மாலை அணிவிப்பது மிக நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
தான் கோபப்பட்டால் தனக்குத் தான் நஷ்டம் என்பதை அறிந்து நடப்பவர் நீங்கள். பொறுமையை கையாண்டு நினைத்த இலக்கை அடைபவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தின் பொருட்டு நீங்கள் பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழில் வளர்ச்சி பெற்று இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் மிகும்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். தாய்வழி சொத்து வந்து சேரும். வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்னைகள் தீரும். தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும்.
மாணவர்கள்
மாணவ மாணவியருக்கு உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
பரிகாரம்
சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
ஆடம்பர செலவு செய்யாமல் தேவைக்கேற்ப செலவு செய்வதில் திறமையானவர் நீங்கள். பொதுவாக சிக்கனமானவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு புதிய வாகனம்வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும். சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்ததற்கு மேலாகவே பணவரவு கிடைக்கும். திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும்.
பரிகாரம்
பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
ஆசைப்படு ஆனால் பேராசை படாதே அது ஆபத்தில் முடியும் என்று எண்ணுபவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும்.
வியாபாரிகளுக்கு
சொந்த தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். இனி முன்னேற்றம்தான்.
குடும்ப தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும். தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும்.
மாணவர்கள்
மாணவ மணிகளுக்கு விளையாடும்போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது.