

கிழமை : வியாழக்கிழமை
தமிழ் வருடம் : பராபவ
தமிழ் மாதம் : ஆடி மாதம்
நாள் : 7
ஆங்கில தேதி : 23
மாதம் : ஜூலை
வருடம் : 2026
நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.00 மணி வரை சுவாதி, பின்னர் விசாகம்.
திதி : இன்று காலை 10.33 மணி வரை நவமி, பின்னர் தசமி.
யோகம் : சித்த யோகம்.
நல்ல நேரம் காலை : 11.00 - 12.00
நல்ல நேரம் மாலை : 12.15 - 01.15
ராகு காலம் : பிற்பகல் 01.30 - 03.00
எமகண்டம் : காலை 06.00 - 07.30
குளிகை : காலை 09.00 - 10.30
கௌரி நல்ல நேரம் காலை : 10.45 - 11.45
கௌரி நல்ல நேரம் மாலை : 06.30 - 07.30
சூலம் : தெற்கு.
சந்திராஷ்டமம் : அசுவினி.
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
புதிய நட்புகள் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மனநிறைவு ஏற்படும் .உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். வீடு தொடர்பான பணிகள் வேகமடையும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உங்கள் அறிவும் பேச்சுத் திறமையும் பலரின் பாராட்டைப் பெறும். தேவையற்ற செலவுகளை குறைக்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய வளர்ச்சி பாதை உருவாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மன அமைதி அதிகரிக்கும். உங்களின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்படும். புதிய முயற்சிகள் வெற்றியை நோக்கி நகரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட நிறம் : கிரே
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பிள்ளைகளின் சாதனை பெருமையை அளிக்கும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுக்கலாம். இறைநம்பிக்கை மன அமைதியை வழங்கும். சொத்து தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் உதவி நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
புதிய முயற்சிகளில் தைரியமாக செயல்படுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆலோசனை பயனளிக்கும். போட்டிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பயணங்கள் லாபகரமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பொறுமையுடன் செயல்பட்டால் சிக்கல்கள் எளிதில் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் அமைதியை பேணுவது நல்லது. தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். இறை வழிபாடு மன அமைதியை அதிகரிக்கும். புதிய முடிவுகளை நிதானமாக எடுக்கவும்.
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு நடைபெறும். பொருளாதார நிலை வலுப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
நண்பர்களின் உதவியால் முக்கிய வேலை ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். புதிய தொடர்புகள் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று முக்கிய பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நீங்கள் எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி தொடர்பான பேச்சுகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். பொருளாதார நிலை முன்னேற்றம் காணும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை