திருமண கனவு நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - (08.06.2026)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
திருமண கனவு நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - (08.06.2026)
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: திங்கட் கிழமை

தமிழ் வருடம்: பராபவ

தமிழ் மாதம்: வைகாசி

நாள்: 25

ஆங்கில தேதி: 8

மாதம்: ஜுன்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று காலை 05.21 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று இரவு 10.40 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம்: மரண, சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.30 - 07.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 7.30 - 9.00

எமகண்டம் காலை: 10.30 - 12.00

குளிகை காலை: 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.30 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 - 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: மகம்

மேஷம்

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பிடித்த வரன் அமையும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு. உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். மாணவர்களின் முயற்சிகள் பலிதமாகும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புர். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். பணவரவு அதிகரிக்கும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுனம்

வாகனம் புதிதாக வாங்குவீர்கள். தந்தைவழி உறவு முறைகளால் சிறிது நன்மையை எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்யிய வண்ணம் வேலை கிடைக்கும். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம். இல்லையென்றால் முக்கிய விசயத்தில் கோட்டை விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

வியாபாரிகள் நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர். சற்று தங்களுடைய உடைமைகளை பத்திரப்படுத்திக் கொள்ளவும். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

திருமண வயதில் உள்ளவர்களுக்கு தங்களின் திருமண கனவு நிறைவேறும். நீண்ட காலமாக காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரித்தாலும் லாபத்தினை எட்டிவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

வியாபாரத்தில் போட்டியை வெல்வீர்கள். பூர்வீக சொத்தில் உள்ள வில்லங்கம் நீங்கும். தங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர். தம்பதிகளின் கருத்து ஒற்றுமை ஓங்கும். அரசியல்வாதிகள் சுதந்திரமாகச் செயல்படுவர். ஆரோக்கியம் மேம்படும். பாதியில் முடங்கிக் கிடந்த கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முழுமையடையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

கணவரின் அன்புக்குரியவராக விளங்குவர். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

விரும்பியவரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். உடல் நலம் பலம் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். எங்கு சென்றாலும் உங்களுக்கு செல்வாக்கு இருக்கும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

தம்பதிகளிடத்தில் நல்ல புரிதல் உண்டாகும். மாணவர்கள் கேள்விகளுக்கான விடையை நினைவில் வைக்க எழுதிப் பார்ப்பது நல்லது. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கும்பம்

பெண்களின் சேமிப்புஉயரும். அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். உடல் உபாதை இருக்கும். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும். தம்பதிகளிடையே கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் சென்றால் அனைத்து நன்மைகளும் தங்களுக்கு உண்டாகும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய நவீன நுட்பத்தை கையாள்வர். சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். உடல்நிலை எப்போதும் சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வியாபாரிகள் அரசு வகையில் ஆதாயபலன் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

X

Daily Thanthi
www.dailythanthi.com