இன்றைய ராசிபலன் (07.07.2026): எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரும்..!

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
ராசிபலன், today tamil rasipalan
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை : செவ்வாய்க்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆனி மாதம்

நாள் : 23

ஆங்கில தேதி : 7

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று மதியம் 01-06 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி.

திதி : இன்று காலை 09-30 வரை சப்தமி, பின்னர் அஷ்டமி.

யோகம் : அமிர்த,சித்த யோகம்.

நல்ல நேரம் காலை : 07-45 – 08-45

நல்ல நேரம் மாலை: 04-45 – 05-45

ராகு காலம் : பிற்பகல் 03-00 – 04-30

எமகண்டம் : காலை 09-00 – 10-30

குளிகை : மதியம் 12-00 – 01-30

கௌரி நல்ல நேரம் காலை : 10-45 – 11-45

கௌரி நல்ல நேரம் மாலை : 07-30 – 08-30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : பூரம்

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வணிகத்தில் புதிய தொடர்புகள் உருவாகும். இல்லத்தில் மகிழ்வூட்டும் நிகழ்வு ஒன்று நடைபெறலாம். பணப்புழக்கம் சீராக அமையும். மாணவர்கள் திட்டமிட்டபடி செயல்பட்டால் நல்ல பலன் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: செங்காவி

ரிஷபம்

வெளியூரிலிருந்து நல்ல தகவல் தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில்முறையில் உங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வர்த்தகத்தில் புதிய வருவாய் வாயில்கள் திறக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு உற்சாகம் தரும். சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் சுறுசுறுப்பு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

பேச்சுத்திறன் இன்று உங்கள் பலமாக அமையும். முக்கிய சந்திப்புகள் சாதகமாக முடியும். வணிகத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல ஆதாயம் கிடைக்கலாம். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும். கல்வியில் கவனம் செலுத்தும் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மரகதப் பச்சை

கடகம்

குடும்பத்தில் இருந்த சிறிய குழப்பங்கள் விலகும். தொழில் சார்ந்த புதிய சிந்தனைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். உறவினர்களின் வருகை மனநிறைவைத் தரும். பொருளாதார நிலை வலுப்பெறும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். குடும்பத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் வார்த்தைகளில் நிதானம் அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறைவழிபாடு மன அமைதியை அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்

கன்னி

எண்ணிய காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறத் தொடங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இல்லத்தில் உற்சாகமான சூழல் உருவாகும். பெண்களுக்கு சுபச் செய்தி கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

துலாம்

உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். பணித்துறையில் செல்வாக்கு உயரும். வெளிநாட்டு தொடர்புகள் பயன் தரும். குடும்பத்தில் கலந்துரையாடல்கள் நல்ல முடிவை எட்டும். மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்பு அமையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

விருச்சிகம்

பணிகளில் இருந்த தாமதம் நீங்கி வேகம் கூடும். வணிகத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். நண்பர்களின் உதவி முக்கிய நேரத்தில் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான திருப்பம் ஏற்படும். புதிய முயற்சிகள் நம்பிக்கையை அளிக்கும். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மகரம்

பணியிடத்தில் உங்கள் அனுபவம் அனைவராலும் பாராட்டப்படும். தொழிலில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் உருவாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் பிறக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

கும்பம்

எதிர்பார்த்த தகவல் இன்று வந்து சேரலாம். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்வான மாற்றங்கள் நிகழும். மாணவர்கள் கவனத்துடன் படித்தால் சிறந்த பலன் காண்பார்கள். மன உறுதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

ஆன்மிக சிந்தனை மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். உறவினர்களின் அன்பு உற்சாகத்தை தரும். மாணவர்கள் முயற்சியில் வெற்றியை அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

X

Daily Thanthi
www.dailythanthi.com