நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும் : இன்றைய ராசிபலன் - நவம்பர் 07, 2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும் : இன்றைய ராசிபலன் - நவம்பர் 07, 2026
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்:-

நவம்பர் 7

கிழமை: சனிக்கிழமை

தமிழ் ஆண்டு: பராபவ

தமிழ் மாதம்: ஐப்பசி

தமிழ் தேதி: 21

ஆங்கில மாதம்: நவம்பர்

ஆங்கில தேதி: 7

நட்சத்திரம்: இன்று காலை 06.19 மணி வரை அஸ்தம் பின்னர் சித்திரை.

திதி: இன்று காலை 11.44 மணி வரை திரயோதசி, பின்னர் சதுர்த்தசி.

யோகம்: மரண யோகம்.

நல்ல நேரம்: காலை 7.45 – 8.45

நல்ல நேரம்: மாலை 04.45 – 05.45

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம்: மாலை 9.30 – 10.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

மேஷம்
மேஷம்

ராசிபலன்

மேஷம்

உங்களுடைய சிந்தனைகளில் புதிய தெளிவு பிறக்கும் நாள். மற்றவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு சிறிய வாய்ப்பைக்கூட சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் செயல்திறன் உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். வியாபாரத்தில் புதிய விற்பனை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சந்திப்பு நிகழும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலைகள் குறையும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். தீபாவளியை முன்னிட்டு வீட்டில் உற்சாகமான சூழல் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

ரிஷபம்
ரிஷபம்

ரிஷபம்

இன்றைய தினம் உங்கள் வாழ்க்கையில் சில இனிய மாற்றங்களுக்கான தொடக்கமாக அமையும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய யோசனைகள் மனதில் உதயமாகும். பணியிடத்தில் உங்களுடைய பொறுமையும் நேர்த்தியும் பாராட்டப்படும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்பு கொள்வார்கள். குடும்பத்தில் பெண்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறலாம். உறவினர்களிடையே உங்களுடைய மதிப்பு உயரும். மாணவர்கள் புதிய பாடங்களை ஆர்வத்துடன் கற்பார்கள். செலவுகளுக்கும் சேமிப்புக்கும் இடையே சமநிலை அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு நிறம்.

மிதுனம்
மிதுனம்

மிதுனம்

உங்கள் அறிவையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவதால் எதிர்பாராத சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். தொழில் செய்பவர்கள் தங்களுடைய வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுபடுத்துவார்கள். வியாபாரத்தில் விளம்பர முயற்சிகள் நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் சுபமான பேச்சுகள் நடைபெறும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் நினைத்த இலக்கை நோக்கி முன்னேறுவார்கள். உணவு மற்றும் உறக்கத்தில் ஒழுங்கைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை.

கடகம்
கடகம்

கடகம்

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் மனநிறைவு தரக்கூடிய பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன ஒரு குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பதற்கான புதிய தொடர்புகள் உருவாகும். வீடு மாற்றம் அல்லது வீட்டைப் புதுப்பிப்பது தொடர்பாக ஆலோசிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். கலைத்துறையினருக்கு தங்களுடைய படைப்புகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். எதிர்பாராத விருந்தினர்களின் வருகை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

சிம்மம்
சிம்மம்

சிம்மம்

உங்களுடைய தன்னம்பிக்கை மற்றவர்களிடையே தனி அடையாளத்தை ஏற்படுத்தும். தொழிலில் புதிய அணுகுமுறைகளைப் புகுத்தி வளர்ச்சிக்கான பாதையை அமைப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான சந்திப்பு சாதகமாக அமையும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் செயல்பாடுகளை கவனித்து முடிவெடுப்பது அவசியம். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை வழிகாட்டியாக இருக்கும். பொருளாதாரத்தில் வரவு இருந்தாலும் சில முக்கியச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் திறமையை ஊக்குவிப்பீர்கள். ஆன்மிகச் சிந்தனைகள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜாப்பூ நிறம்..

கன்னி
கன்னி

கன்னி

உங்கள் வாழ்க்கையில் ஒழுங்கையும் முன்னேற்றத்தையும் இணைத்துச் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் மறைந்திருந்த உங்கள் திறமை வெளிப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நம்பிக்கை தரும் தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் பொருட்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மனதிற்குப் பிடித்த காரியத்தைச் செய்து மகிழ்வீர்கள். பழைய நண்பர் ஒருவரின் சந்திப்பு உற்சாகத்தை ஏற்படுத்தும். பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நன்கு ஆராயவும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.

துலாம்
துலாம்

துலாம்

இன்று உங்களுடைய வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறலாம். எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பதில் சாதகமாக வருவதற்கு வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் உறவுகளின் ஒற்றுமை பலப்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கலாம். மாணவர்கள் தங்களுடைய இலக்குகளை மறுபரிசீலனை செய்து புதிய திட்டத்துடன் படிப்பார்கள். தேவையற்ற மனக்குழப்பங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மயில்கழுத்து பச்சை.

விருச்சிகம்
விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுடைய விடாமுயற்சிக்கு நல்லதொரு திருப்பம் கிடைக்கும் நாள். தொழில் தொடர்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட நல்ல விற்பனை நடைபெறலாம். குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஒரு நல்ல செய்தி வந்து சேரும். பண விஷயங்களில் பிறருக்கு வாக்குறுதி அளிப்பதைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: செம்பழுப்பு.

தனுசு
தனுசு

தனுசு

உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கும் வகையில் இன்றைய செயல்பாடுகள் அமையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் புதிய சந்தையை அறிமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பற்றிய பேச்சு நடைபெறும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் சில நன்மைகள் கிடைக்கலாம். மாணவர்கள் உயர்கல்வி முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்.

மகரம்
மகரம்

மகரம்

இன்றைய நாள் உங்களுக்கு அனுபவத்தின் மூலம் நல்ல முடிவுகளைப் பெற்றுத் தரும். பணியிடத்தில் மற்றவர்களால் முடிக்க முடியாத சில வேலைகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து செயல்படுவது லாபத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வீடு, மனை தொடர்பான முயற்சிகளில் தகவல்கள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்வீர்கள். மாணவர்கள் விடாமுயற்சியால் முன்னேற்றம் காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கும்பம்
கும்பம்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவெடுக்காமல் சற்று யோசித்து செயல்படுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கிய ஆவணங்களை சரிபார்த்து கையாள்வது அவசியம். தொழிலில் புதிய முதலீடு தொடர்பான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரத்தில் வரவு தாமதமானாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். பணத்தை பிறருக்காக செலவிடும் முன் உங்கள் தேவைகளை கவனியுங்கள். குடும்பத்தில் ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மனதை அமைதிப்படுத்தி படித்தால் நல்ல பலன் கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.

மீனம்
மீனம்

மீனம்

உங்கள் மனதில் இருந்த தயக்கங்கள் விலகி செயல்களில் வேகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். வியாபாரத்தில் இதுவரை கிடைக்காத சில ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமிதத்தைத் தரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் மேலோங்கும். பொருளாதாரத்தில் சீரான நிலை காணப்படும். உடல் நலனில் கவனம் செலுத்தி ஓய்வெடுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தனம் நிறம்.

X