நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - 20.07.2026

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்... இன்றைய ராசிபலன் - 20.07.2026
Published on

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம் : பராபவ

தமிழ் மாதம் : ஆடி மாதம்

நாள் : 4

ஆங்கில தேதி : 20

மாதம் : ஜூலை

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று முழுவதும் அஸ்தம்.

திதி : இன்று காலை 08.29 மணி வரை சஷ்டி, பின்னர் சப்தமி.

யோகம் : சித்த யோகம்.

நல்ல நேரம் காலை : 06.15 - 07.15

நல்ல நேரம் மாலை : 04.45 - 05.45

ராகு காலம் : காலை 07.30 - 09.00

எமகண்டம் : காலை 10.30 – 12.00

குளிகை : பிற்பகல் 01.30 - 03.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.45 - 10.30

கௌரி நல்ல நேரம் மாலை : 07.30 - 08.30

சூலம் : கிழக்கு.

சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி.

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒரு முக்கிய முயற்சி வெற்றி பெறும். நீங்கள் நினைத்த காரியங்களை தைரியமாக முன்னெடுத்துச் செல்வீர்கள். வேலை தொடர்பான புதிய வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத பணவரவு மனநிறைவைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

ரிஷபம்

உங்கள் பேச்சுத் திறமையால் பலரை கவர்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்ட நாள் காத்திருந்த தகவல் மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

புதிய முதலீடுகள் குறித்து நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடல்நலத்தில் இருந்த சிறு சிரமங்கள் குறையும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை வகுப்பீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சு நடைபெறும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

வேலையில் உங்கள் முயற்சிக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

கன்னி

பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அளிக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மனநிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உங்கள் செயல்திறனை அனைவரும் பாராட்டுவார்கள். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உருவாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக அமையும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

விருச்சிகம்

துணிச்சலான முடிவுகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணங்களால் நன்மை ஏற்படும். புதிய நட்புகள் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். மன உற்சாகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : செம்பழுப்பு

தனுசு

மனஅழுத்தத்தை குறைத்து அமைதியாக செயல்படுங்கள். குடும்பத்தினரின் ஆலோசனையை மதிப்பது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். இறைநம்பிக்கை தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை சற்று ஆராய்ந்து தொடங்குங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கிரே

மகரம்

வீடு, மனை தொடர்பான முயற்சிகள் நல்ல திசையில் நகரும். தம்பதியரிடையே புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வருமானத்தை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

மீனம்

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். பிள்ளைகளின் சாதனை பெருமையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். பொருளாதார நிலை வலுப்படும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com