

இன்றைய பஞ்சாங்கம்
நவம்பர் 28
கிழமை: சனிக்கிழமை
தமிழ் வருடம்: பராபவ ஆண்டு
தமிழ் மாதம்: கார்த்திகை
நாள்: 12
ஆங்கில தேதி: 28
மாதம்: நவம்பர்
வருடம்: 2026
நட்சத்திரம்: மாலை 06.44 மணி வரை புனர்பூசம்.
பின்னர் பூசம்.
திதி: பிற்பகல் 12.18 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.
யோகம் : சித்த யோகம்.
நல்ல நேரம் : காலை
10.45 – 11.45
நல்ல நேரம் : மாலை 04.45 – 05.45
ராகு காலம் : காலை 09.00 – 10.30
எமகண்டம் : மதியம் 01.30 – 03.00
குளிகை : காலை 06.00 – 07.30
கௌரி நல்ல நேரம் : காலை 12.15 – 1.15
கௌரி நல்ல நேரம் : மாலை 09.30 – 10.30
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்.
நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் காரியங்கள் நல்ல பாதையில் நகரும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உருவாகலாம். வருமானத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் எண்ணம் நிறைவேறலாம். பிள்ளைகளின் கல்வி தொடர்பான கவலைகள் குறையும். மாணவர்கள் புதிய பாடங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களின் திறமைக்கு உரிய மேடை கிடைக்கலாம். பண விஷயங்களில் பிறரை முழுமையாக நம்பி முடிவெடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் அமையும். பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். தொழில் செய்பவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள். கலைஞர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாகக் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்.
புதிய சிந்தனைகள் உங்களுடைய செயல்களுக்கு வலிமை சேர்க்கும். முக்கியமான சந்திப்பு ஒன்று எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பணியிடத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களை கவனமாகக் கையாள்வது அவசியம். குடும்பத்தில் உங்களுடைய ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான ஆயத்தத்தில் சிறந்து விளங்குவார்கள். பெண்களுக்கு குடும்பத்தினரிடையே மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். புதிய முயற்சிகளை நிதானமாகத் தொடங்குவது சிறப்பு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படும். வருமானத்தைப் பெருக்குவதற்கான புதிய வழிகளை ஆராய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்களால் அனுகூலம் ஏற்படலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலை உருவாகும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் நன்மை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டும் புதிய அறிமுகங்களும் கிடைக்கலாம். உணவு முறையில் ஒழுங்கைக் கடைப்பிடியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
உங்களுடைய தனித்துவமான அணுகுமுறை பல இடங்களில் கவனத்தைப் பெறும். வருமானம் தொடர்பான முயற்சிகளில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமிதத்தைத் தரும். நண்பர்கள் வழியாக எதிர்பாராத உதவி கிடைக்கலாம். வீடு மற்றும் மனை தொடர்பான திட்டங்களை மீண்டும் பரிசீலிப்பீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றலும் கற்றல் திறனும் அதிகரிக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தினால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வென்பட்டு நிறம்
சிறிய முயற்சிகள்கூட பெரிய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். நிதி சார்ந்த திட்டங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கலாம். வியாபாரிகள் புதிய சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாகப் பேசப்பட்ட ஒரு விஷயத்திற்கு தீர்வு கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கலாம். மாணவர்கள் தங்களுடைய இலக்கை நோக்கி உறுதியுடன் செயல்படுவார்கள். கலைஞர்களுக்கு புதிய படைப்புகளை உருவாக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்த்து செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.
உங்களுடைய எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க ஏற்ற நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கியமான நபர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான உரையாடல்கள் நடைபெறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கு குடும்பத்தினர் துணை நிற்பார்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
உங்களுடைய திட்டங்களில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகளை அடையாளம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கவனத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய தொடர்புகள் மீண்டும் புத்துயிர் பெறும். குடும்பத்தில் சுபச்செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். சொந்த வீடு தொடர்பான எண்ணங்களுக்கு சாதகமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒரு முக்கியமான வேலை நிறைவேறும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் அமையலாம். மன அமைதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த விஷயத்திலும் அவசரமாக முடிவெடுக்காமல் சற்று யோசித்து செயல்படுங்கள். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கிய ஆவணங்களை சரிபார்த்து கையாள்வது அவசியம். தொழிலில் புதிய முதலீடு தொடர்பான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரத்தில் வரவு தாமதமானாலும் நிலைமை கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத செலவு ஒன்று வரலாம். பணத்தை பிறருக்காக செலவிடும் முன் உங்கள் தேவைகளை கவனியுங்கள். குடும்பத்தில் ஒருவரின் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடு வந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயணத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மனதை அமைதிப்படுத்தி படித்தால் நல்ல பலன் கிடைக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்.
நீங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு மாற்றம் இன்று நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. வேலை சம்பந்தமான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்து ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்தாலும் அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பழைய கடன்களைச் சீரமைப்பதற்கான வழி பிறக்கும். உறவினர்களுடன் இணைந்து செய்யும் காரியங்கள் அனுகூலமாக அமையும். மாணவர்கள் கவனச்சிதறலைத் தவிர்த்து படிப்பில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு நீண்ட நாள் விருப்பம் ஒன்றை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடல் சோர்வைத் தவிர்க்க ஓய்வெடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
புதிய மனிதர்களின் அறிமுகம் உங்களுடைய எதிர்காலத் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். பணவரவில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் திறமையை நிரூபிப்பதற்கான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புதிய யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மனநிறைவும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியளிக்கும். வெளியூர் பயணங்களால் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முக்கியமான ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்
எதிர்பாராத சில நல்ல தகவல்கள் மனதில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் இருந்த ஒரு காரியத்தில் சாதகமான திருப்பம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும். பணவரவில் இருந்த சிறிய தடைகள் விலகுவதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடன் படிப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.