பாந்திராவில் துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொல்ல முயற்சி

மும்பை பாந்திராவில் துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொல்ல முயற்சி
பாந்திராவில் துப்பாக்கியால் சுட்டு முதியவரை கொல்ல முயற்சி
Published on

மும்பை,

மும்பை பாந்திராவை சேர்ந்தவர் சாமத் அகமது (வயது 61). நேற்று தனது அறிந்தவர்களிடம் பேசி கொண்டிருந்த போது பின்புறமாக வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றனர். இதில் முடியாமல் போனது. படுகாயமடைந்த சாமத் அகமதுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த நிர்மல் நகர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் துப்பாக்கியால் சுட்டவர் 40 வயதுடைய நபர் எனவும், இவர் காயமடைந்த சாமத் அகமதுவிற்கு அறிமுகமானவர் எனவும் தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com