ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

பெங்களூருவில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலிதாபமாக உயிரிழந்தார்.
ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
Published on

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் மாரகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 48). டிரைவரான இவர், ஆட்டோ ஓட்டி வந்தார். நெலமங்களா தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் நரசிம்மராஜ் தனது ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தலையில் காயம் அடைந்த நரசிம்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com