ஆட்டோ திருட்டு

புதுப்பேட்டை அருகே வீட்டின் முன்புறம் நிறுத்தி இருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ திருட்டு
Published on

புதுச்சேரி

லாஸ்பேட்டை புதுப்பேட்டை புதுதெருவை சேர்ந்தவர் விநாயகவேலு (வயது32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. மர்மநபர் யாரோ ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com