திருமருகல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா

ஆவணித் திருவிழா சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து, அதன்மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருமருகல் அருகே செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா
Published on

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி, திருமாளம்பொய்கை கிராமத்தில் வரந்தர நாயகி சமேத காளகண்டேஸ்வரர், தபஸ் காமாட்சி, செல்லியம்மன், செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 28-ஆம் தேதி பந்தகால் முகூர்த்தம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சாமிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து, அதன்மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திருமாளம்பொய்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com