கோவில்பட்டியில் அய்யப்ப பக்தர்களின் எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்தனர்

அய்யப்ப பக்தர்களின் எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்தனர்
கோவில்பட்டியில் அய்யப்ப பக்தர்களின் எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்தனர்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி லோக் வீர் அய்யப்ப சேவா சங்கம் சார்பில், காயத்ரி மண்டபத்தில் 47-வது ஆண்டு மண்டல பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் தொடங்கிய அய்யப்ப சாமி லட்சார்ச்சனை நேற்று நிறைவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பூஜைகள், ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த எச்சில் இலைகளை மண்டபத்தில் விரித்து அதில் அய்யப்ப பக்தர்கள், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அய்யப்ப பக்தர்கள் எச்சில் இலைகளை தலையில் வைத்துக் கொண்டு செண்பகவல்லி அம்மன் கோவிலை சுற்றி வந்து, அவற்றை தொட்டியில் போட்டுவிட்டு, பின்னர் குளியலை முடித்து, உணவருந்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தார்கள். இந்த மாதம் 30-ந்தேதி செல்லானந்த சுப்பிரமணிய சுவாமிகள் குருபூஜை மற்றும் கூட்டு கன்னி பூஜை நடைபெறுகிறது.

ஜனவரி 10-ந்தேதி இரவு 9 மணிக்கு அய்யப்ப சாமிக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை மற்றும் படி பூஜை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com