மதுவுக்கு எதிரான கதையில் பாக்யராஜ்

மதுவுக்கு எதிரான கதையில் பாக்யராஜ்
Published on

மதுப் பழக்கத்தால் ஏழை குடும்பங்கள் சந்திக்கும் பாதிப்புகளை மையமாக வைத்து `சரக்கு' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் மன்சூர் அலிகான் நாயகனாக நடித்து தயாரிக்கிறார். கே.பாக்யராஜ், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், வலினா, பபிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே.டைரக்டு செய்கிறார்.

படம் பற்றி மன்சூர் அலிகான் கூறும்போது, ``மதுப் பழக்கத்தால் பல ஏழை குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை சொல்லும் படமாக உருவாகிறது'' என்றார். ஒளிப்பதிவு: அருள் வின்செண்ட், மகேஷ் டி., இசை: சித்தார்த் விபின், திரைக்கதை-வசனம்: எழிச்சூர் அரவிந்தன். படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com