பிக்பாஸ் சீசன் 5 - இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்‌ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 5 - இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷன் பட்டியலில் பாவனி ரெட்டி மற்றும் தாமரைச் செல்வி தவிர இதர 15 போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டு உள்ளாராம். இவர் மலேஷியாவை சேர்ந்தவர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படும் முதல் போட்டியாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com