திருச்செந்தூர் அருகே இரு தரப்பினர் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது

திருச்செந்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் அருகே இரு தரப்பினர் மோதல்; 3 பேருக்கு அரிவாள் வெட்டு 2 பேர் கைது
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொக்லைன் ஆபரேட்டர்

திருச்செந்தூர் வீரராகவபுரத்தைச் சேர்ந்தவர் நம்பி. இவருடைய மகன் முத்து (வயது 26), பொக்லைன் ஆபரேட்டர். இவர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மெயின் ரோடு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டார்.

அப்போது ஆலந்தலையை அடுத்த செந்தூர்நகரைச் சேர்ந்த முருகையா (33) என்பவர், அங்கு தோண்டப்படும் மண்ணை தனது வீட்டின் அருகில் கொட்டுமாறு முத்துவிடம் கூறினார். இதற்கு முத்து மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு


பின்னர் இரவில் முத்து அங்கிருந்து தன்னுடைய நண்பரான திருச்செந்தூர் வீரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானமூர்த்தியுடன் (20) மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அங்கு வந்த முருகையா, அவருடைய நண்பர்களான சுந்தர், தூத்துக்குடி என்.கே.புரத்தைச் சேர்ந்த முத்துமாரி (38) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த முருகையா தரப்பினர், முத்து, ஞானமூர்த்தி ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

இதில் காயம் அடைந்த முத்து, ஞானமூர்த்தி ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் முத்துவை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முத்து, ஞானமூர்த்தி உள்பட 6 பேர் சேர்ந்து தன்னை அரிவாளால் வெட்டியதாக முருகையா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில், முருகையா, சுந்தர், முத்துமாரி ஆகிய 3 பேர் மீதும், முருகையா அளித்த புகாரின்பேரில் முத்து உள்பட 6 பேர் மீதும் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சுந்தர், முத்துமாரி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com