மீண்டும் படம் இயக்கும் நடன இயக்குனர் பிருந்தா

நடன இயக்குனர் பிருந்தா மீண்டும் ரியா ஷிபுவின் ‘தக்ஸ்‘ என்ற படத்தை இயக்குகிறார்.
மீண்டும் படம் இயக்கும் நடன இயக்குனர் பிருந்தா
Published on

இந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் பிருந்தா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, அமீர்கான், அக்ஷய்குமார், சிரஞ்சீவி உள்ளிட்ட பல கதாநாயகர்கள் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் ஹேய் சினாமிகா படம் மூலம் டைரக்டராகவும் அறிமுகமானார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைதரி ஆகியோர் நடித்து இருந்தனர். தற்போது மீண்டும் ரியா ஷிபுவின் 'தக்ஸ்' என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹிரிது ஹாருண், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com