ரூ.28¼ கோடியில் நவீன வசதியுடன் சத்திரம் நகர பஸ் நிலையம் தயார்

ரூ.28¼ கோடியில் நவீன வசதியுடன் சத்திரம் நகர பஸ் நிலையம் தயார்
ரூ.28¼ கோடியில் நவீன வசதியுடன் சத்திரம் நகர பஸ் நிலையம் தயார்
Published on

திருச்சி, டிச.26-
திருச்சி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியே 24 லட்சத்தில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சத்திரம் நகர பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதனை நேற்று காலை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 30-ந் தேதி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக முதற்கட்டமாக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில், சென்னை கோயம்பேடு மார்க்கெட் மாதிரி சில்லறை மார்க்கெட் கொண்டுவரப்படும். திருச்சியில், ஏற்கனவே சத்திரம் அண்ணா சிலையில் இருந்து குடமுருட்டி வரைஉயர்மட்டசாலைஅமைக்கதிட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டம் மாற்றப்பட்டு, அண்ணா சிலையில் இருந்து ஜங்ஷன் வரை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டை கடந்த ஆட்சியாளர்கள் தவறாக கட்டிவிட்டார்கள். ரூ.80 கோடி செலவு செய்து சின்னச்சின்ன அறைகளாக கட்டியிருக்கிறார்கள். வல்லுநர் குழு மூலம் அதனை எதற்குபயன்படுத்துவது? என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, திருச்சியில் 30-ந் தேதி விழா நடக்கும், கேர் கல்லூரி வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com