மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை..! சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
Published on

சென்னை,

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயரத் தொடங்கியது.

கடந்த 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்த வண்ணம் இருக்கிறது. நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.68,480-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.8,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.112-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது தங்களுடைய கவனத்தை திருப்பி இருப்பதால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருவதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com