தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன...?

இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
தங்கம் விலை
Published on: 

சென்னை.

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்தது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,10,200க்கும்,கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,775-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,400க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,675-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.245-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com