அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம்விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து பெரும்பாலான நாட்கள் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந் தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயரத் தொடங்கியது.

கடந்த 28-ந் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்த வண்ணம் இருக்கிறது. நேற்றும் சவரனுக்கு அதிரடியாக ரூ.400 அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.68,480-க்கும், ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து ரூ.8,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200 விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ரூ.160 குறைந்து ரூ.8,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 08 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com