மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்
Published on

சென்னை,

உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது. இந்த சூழலில் கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல், அதனுடைய வேகத்தில் நிசப்தம் நிலவி வந்த சூழலில், 12-ம் தேதி மீண்டும் எகிறி, உயர்ந்து காணப்பட்டது.

இந்த சூழலில் தங்கம் விலை நேற்று சற்று குறைந்திருந்தது. இதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ரூ,81,680க்கு விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.10,210க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று வெள்ளி விலையில் மாற்றமின்றி, கிராம் ரூ.143க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

16.09.2025 ஒரு சவரன் ரூ,82,240 (இன்று)

15.09.2025 ஒரு சவரன் ரூ,81,680 (நேற்று)

14.09.2025 ஒரு சவரன் ரூ.81,760

13.09.2025 ஒரு சவரன் ரூ.81,760

12.09.2025 ஒரு சவரன் ரூ.81,920

11.09.2025 ஒரு சவரன் ரூ.81,200

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com