தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், கடந்த வார இறுதியில் சரிவுடன் விற்பனையானது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.

அதன் பின்னர், அதிகரித்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.70,040க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.8720 க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்றைய தங்கம் விலை நிலவரம்;

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ. 1 குறைந்து ஒரு கிராம் ரூ. 109க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com