அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை 2-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது.

நேற்று முன்தினம் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையான தங்கம், நேற்று பவுனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 840 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,230 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2-வது நாளாக இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 240 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.9,155 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com