ஒரேநாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
 ஒரேநாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன..?
Published on: 

சென்னை,

தங்கம் விலை இன்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த வார தொடக்கத்தில் உயர்ந்து வந்த நிலையில், வார இறுதியில் அதிரடியாக குறைந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.2,480-ம், கிராமுக்கு ரூ.310-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.

இதனை தொடர்ந்து சென்னையில் 3வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,02,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,825-க்கு விற்பனை செய்யப்பட்டது.

2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமிற்கு மேலும் ரூ. 275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமிற்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 210க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X