மாலையில் மீண்டும் விலை ஏறிய தங்கம்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்துள்ளது.
மாலையில் மீண்டும் விலை ஏறிய தங்கம்
Published on

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.

அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்தது.

இதனையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து இறங்கிய நிலையில் இருந்தது.

இந்தநிலையில், திடீர் திருப்பமாக சென்னையில் காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.1,920 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் காலையில் ஒரு கிராமிற்கு ரூ.80 உயர்ந்தநிலையில் மீண்டும் ரூ.240 அதிகரித்து விற்பனை ஆகிறது. தங்கம் விலை மாலையில் கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com