ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்... இன்றைய நிலவரம் என்ன..?

வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம்... இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம், வெள்ளியின் விலை மாறி, மாறி உயர்ந்து வருகிறது. இதில் தங்கம் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ.12 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.12,820 ஆக அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 560-க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.245 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000- அதிகரித்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890-க்கும் பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதைபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.254-க்கும், கிலோவுக்கு ரூ.9,000-ம் அதிகரித்து ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தைக் காட்டிலும் வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருவதால் நகைப் பிரியர்கள், இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com