தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு..இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று உயர்ந்த நிலையில், இன்றும் விலை அதிகரித்துள்ளது.
தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு..இன்றைய விலை நிலவரம்
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 11-ந்தேதியில் இருந்து விலை அதிகரிக்கத் தொடங்கி, கடந்த 13-ந்தேதி ஒரு பவுன் ரூ.74,360 என்ற வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதற்கு மறுநாளும் விலை அதிகரித்து, மேலும் புதிய உச்சத்தை பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 16, 17-ந்தேதிகளில் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 200-க்கும், ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 250-க்கும், ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 120 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,265 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com