சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன.?

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை.
தங்கம் விலை
Published on: 

சென்னை,

கடந்த வாரம் தொடர் சரிவில் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் அதிகரிக்கத் தொடங்கியது.

தங்கம் விலை

அதன்படி, கடந்த 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360-ம், 3-ந்தேதி சவரனுக்கு ரூ.200-ம், 4-ந்தேதி சவரனுக்கு ரூ. 2,200-ம், 5-ந்தேதி சவரனுக்கு 2,488-ம் உயர்ந்து இருந்தது. இதற்கிடையே, நேற்று சவரனுக்கு ரூ.1,960 குறைந்து, ஒரு சவரன் ரூ. 105,120-க்கும், கிராமுக்கு ரூ.245 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 105,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 205க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,05,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X