

சென்னை,
தங்கம் விலை கடந்த 19-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதன் பின்பு கடந்த 25-ந் தேதி தங்கம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினமும் தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து திடீர் திருப்பமாக நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை:-
இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, இன்று தங்கம் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை குறைந்துள்ளது.
வெள்ளி விலை:-
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
29.04.2026 ஒரு சவரன் ரூ.1,11,600 (இன்று)
28.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,840 (நேற்று)
27.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,840
25.04.2026 ஒரு சவரன் ரூ.1,13,600
24.04.2026 ஒரு சவரன் ரூ.1,12,800