தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,200 குறைந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.71.640-க்கும், ஒரு கிராம் ரூ. 8955-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை ரூ. 1 உயர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.118-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com