தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன...?

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை சற்று குறைவு... இன்றைய நிலவரம் என்ன...?
Published on

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 23, 24-ந்தேதிகளில் ஒரே நாளில் விலை ஏற்றம்-இறக்கத்தை சந்தித்தது. கடந்த 28-ந்தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280-க்கும், கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒருகிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி 5 நாட்கள் விவரம்:-

30-03-2026 - ஒரு பவுன் 1,08,800

28-03-2026- ஒரு பவுன் ரூ.1,09,280

27-03-2026- ஒரு பவுன் ரூ.1,07,440

26-03-2026- ஒரு பவுன் ரூ.1,06,800

25-03-2026- ஒரு பவுன் ரூ.1,08,800

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com